Sunday, May 11, 2025

இன்று பக்ரீத் பண்டிகை...இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin Government of Tamil Nadu
By Thahir 3 years ago
Report

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக இன்று கொண்டாடப்படவுள்ளது.

பக்ரீத் பண்டிகை - முதலமைச்சர் வாழ்த்து

இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது:

‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து,தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.