பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை ஜோர்!!
செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாகவுள்ளதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வார வாரம் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, மாடு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
இந்த நிலையில் வரும் புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஏராளமான இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
ஒரு ஆட்டின் விலை 4000 முதல் 25 ஆயிரம் வரை விலை போனது இதனால் ஆடுகள் விற்பனை 6 கோடி அளவிற்கு ஆடுகளின் விற்பனை நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் ஆடுகளை வாங்கி செல்வதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.