காளீஸ்வரியின் நாடகம்; யோகா மாஸ்டருடன் உல்லாசம் - கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்!
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே ஆள்வைத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12ம் தேதி குடும்பத்துடன் பைக்கில் வந்த பேக்கரி உரிமையாளரான சிவக்குமார் (42) என்பவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கணவர் சிவக்குமார் கொலைசெய்யப்பட்டதாக அவரின் மனைவி காளீஸ்வரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரியே தன் ஆண் நண்பருடன் இணைந்து இந்தக் கொலையை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
அதில், கணவர் சிவக்குமார் தனது மனைவி காளீஸ்வரியை நிர்வாகியாகக்கொண்டு அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த அறக்கட்டளையில் ஒத்தப்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் உறுப்பினராக இருக்கிறார். ஐயப்பன் யோகா மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர். இவரும், காளீஸ்வரியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். தொடர்ந்து ஐயப்பனுடன் இணைந்து வாழ விரும்பிய அவர், அதற்கு இடையூறாக இருக்கும் தன் கணவர் சிவக்குமாரைக் கொலைசெய்ய முடிவெடுத்திருக்கிறார்.
கணவன் கொலை
இதற்காக, தன் ஆண் நண்பர் ஐயப்பனுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். ஐயப்பன் தன்னுடைய உதவியாளர்களான விக்னேஸ்வரன், மருதுபாண்டி ஆகியோரை அனுப்பி சிவக்குமாரை கழுத்தை அறுத்து செய்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையின்போது காளீஸ்வரி முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதால், காளீஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் காளீஸ்வரி பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை ஆய்வுக்குட்படுத்தியதில் காளீஸ்வரியும் ஐயப்பனும் கொலை சம்பவம் நடந்த அன்று மட்டும் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவனை ஐயப்பனுடன் சேர்ந்து ஆள்வைத்து கொலை செய்ததை காளீஸ்வரி ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து காளீஸ்வரி, ஐயப்பன் உட்பட கொலையில் தொடர்புடைய விக்னேஸ்வரன், மருதுபாண்டியை ஆகியோரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த சமத்துவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.