எப்பவும் படுக்கையறை பத்தியே பேசுற..டேய்...போடா - பயில்வான் ரங்கநாதன் கே.ராஜன் மோதல்
திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் கே.ராஜன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடிகைகளின் அந்தரங்கதை பற்றி பேசும் பயில்வான்
அண்மை காலமாக தமிழ் சினிமா கதாநாயகிகளை கடுமையாக அவர்களின் அந்தரக விஷயங்கள் முதல் அத்தனையையும் தெரிவித்து வருகிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
இதற்கு பல்வேறு நடிகைகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரேகாநாயர் கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு சென்ற போது காலணியை கொண்டு தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் பேச்சுக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் கண்டனங்களை தெரிவித்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில்,
கடந்த 13 ஆம் தேதி கட்சிக்காரன் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்ற நிலையில், அங்கு சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜனும் வந்திருந்தார்.
கே.ராஜன் - பயில்வான் ரங்கநாதன் வாக்குவாதம்
அப்போது அங்கு திடீரென வந்த பயின்வான் ரங்கநாதன் மேடையில் பேசிக்கொண்டிருந்த கே.ராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்கள் இருவரையும் படக்குழுவினர் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் நீ தாய்மார்களை நடிகைகளை கேவலப்படுத்திட்டு இருக்க... பெட்ரூம் பற்றி பேசுற என்று ஆவேசமாக பேசினார் கே.ராஜன்.
பின்னர் இருவரும் ஒருவரையொருவர் போடா..டேய் என ஒருமையில் பேசிக்கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பயில்வான் ரங்கநாதனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.