மோடி குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்திக்கு ஜாமீன் நீட்டிப்பு
ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி
மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுசர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன்
இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. நாட்டில் பேசுபொருளாகியுள்ள இந்த வக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்திக்கு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.