Monday, May 12, 2025

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை - 8 பேர் கைது !! சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

Tamil nadu Chennai Tamil Nadu Police Death
By Karthick 10 months ago
Report

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் நேற்று நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போதே, இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Bahujan Samanj Party Stare Leader Amstrong death

மரணமடைந்த ஆம்ஸ்ட்ராங்கின் வயது 52 ஆகும். இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி நகரில் வசித்து வரும் இவருக்கு, பொற்கொடி என்ற மனைவியும் 2 1/2 வயதில் குழந்தை ஒருவரும் உள்ளார். மாயாவதியின் கட்சியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வரும் ஆம்ஸ்ட்ராங் நேற்று காலமாகியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை - 8 பேர் கைது !! சென்னையில் உச்சகட்ட பரபரப்பு | Bahujan Samaj State President Amstrong Death

வெட்டப்பட்ட போது அதனை தடுக்க சென்ற 2 பேருக்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவரே கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில தலைநகரான சென்னையில் உச்சக்கட்ட பதற்றம் உண்டாகியுள்ளது.

ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு, ராமு, திருமலை, திருவேங்கடம், மணிவண்ணன், செல்வராஜ், அருள், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.