BadBoy இமேஜ்; நடிகையுடன் கிசுகிசு - இந்திய அணியில் இடம்? பத்ரி ஆதங்கம்!

Ruturaj Gaikwad Indian Cricket Team
By Sumathi Jul 21, 2024 09:30 AM GMT
Report

பத்ரிநாத் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்

இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

BadBoy இமேஜ்; நடிகையுடன் கிசுகிசு - இந்திய அணியில் இடம்? பத்ரி ஆதங்கம்! | Badrinath Disappointed Ruturaj Removed Indian Team

இதில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மூன்று பேரும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், ஹர்திக் இருந்தும் சூர்யாவிற்கு டி20 கேப்டன்சி, டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பதவி. ருதுராஜுக்கு இரண்டு அணியிலும் வாய்ப்பு மறுப்பு, என அணியில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் குறித்து முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத்,

எனக்கு மனைவி, குழந்தை இருக்காங்க; வேகத்தை குறைங்க - கவெம் ஹாட்ஜ் கலகல..

எனக்கு மனைவி, குழந்தை இருக்காங்க; வேகத்தை குறைங்க - கவெம் ஹாட்ஜ் கலகல..

பத்ரிநாத் ஆதங்கம்

“அணியில் மற்றதையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஆனால் வாய்ப்பு கிடைத்த தொடர்களில் எல்லாம் அபாரமாக ஆடி 70 சராசரி வைத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவும் ஏற்கமுடியாததாகவும் இருக்கிறது. ஒரு சீசனில் அடித்துவிட்டதால் ரியான் பராக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமானால்,

தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல் தொடர்வரை ரன்களை குவித்து வரும் ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்திய அணியில் இடம்பெற BADBOY இமேஜ் இருந்தால் போதும் போல, நடிகைகளுடன் கிசுகிசு, புரோமோசன்ஸ்,

உடம்பில் பச்சைக்குத்திக்கொண்டு பேட்-பாய் இமேஜ் வைத்திருந்தால் இந்திய அணியில் இடம் கிடைத்துவிடும் போல தோன்றுகிறது. ருதுராஜுக்கு நீதிவேண்டும் என சொல்லவேண்டும் போல இருக்கிறது, இந்த இந்திய அணியின் தேர்வு” என தெரிவித்துள்ளார்.