பி.வி.சிந்து 2வது பதக்கம் பெற்று வரலாற்று சாதனை!! ரசிகர்கள் மகிழ்ச்சி!

win badminton tokyo olympics pv sindhu
By Anupriyamkumaresan Aug 01, 2021 12:47 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ந்து மற்றொரு பதக்கத்தை பெற்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பி.வி.சிந்து 2வது பதக்கம் பெற்று வரலாற்று சாதனை!! ரசிகர்கள் மகிழ்ச்சி! | Badminton Olympic Tokyo Pvsindhu Win

ஒலிம்பிக் பேட்மிண்டனில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கம் வென்று வரலாறு படைத்தார்

பி.வி.சிந்து. டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட்டைக் கூட இழக்காமல் வீறுநடை போட்டு பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தார்.

இருப்பினும் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் தைவானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான தை சு யிங்க்கை எதிர்கொண்டார்.

அரையிறுதி போட்டியில் 18-21, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்தார். தோல்வி அடைந்த போதிலும் வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பு சிந்துவுக்கு இருந்தது.

தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற போட்டியில், சீனாவின் ஹீ பிங்சியாவோ-வை எதிர்த்து மல்லுக்கட்டினார். முதல் செட்டில் ஆதிக்கத்தை செலுத்திய பி.வி.சிந்து அந்த செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார்.

பி.வி.சிந்து 2வது பதக்கம் பெற்று வரலாற்று சாதனை!! ரசிகர்கள் மகிழ்ச்சி! | Badminton Olympic Tokyo Pvsindhu Win

இறுதியில் இரண்டாவது செட்டை சிந்து, 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் பிவி.சிந்து.

சிந்துவின் வெற்றியை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

You May Like This Video