ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டால் பக்கவாதம் வருமா? -அமெரிக்க எஃப்டிஏ எச்சரிக்கை!

vaccine johnsonjohnson badworse
By Irumporai Jul 13, 2021 11:13 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு பக்கவாத பாதிப்புகளை உண்டாக்கலாம் என சமீபத்திய ஆய்வுகளில் கூறப்பட்டது.

ஜான்சன்& ஜான்சன் தடுப்பூசியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளின் அறிக்கைகள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி ஜான்சன் தடுப்பூசிகல் சில நபர்களுக்கு நரம்பு மணடல பாதிப்பை ஏற்படுத்துவதாக எஃப்டிஏ தெரிவித்துள்ளது.

இதனால் தசை பலவீனம் மற்றும் சில நேரங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. சில அரிய வகை இரத்த உறைவு சிக்கல்கள் எழுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.