இப்படியேபோனால் விளைவு மோசமாக இருக்கும்.. ட்விட்டரை எச்சரிக்கும் மத்திய அரசு!

warns goverment twitter
By Irumporai Jun 05, 2021 10:50 AM GMT
Report

சமூக வலைத்தளங்கள் புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்.அவ்வாறு இல்லையென்றால் சட்டப்படி ,விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து3 மாதம் காலஅவகாசம் வழங்கியது.

தற்போது காலஅவகாசமானது கடந்த மே 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்காரணமாக,புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து,கூகுள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக  அறிவித்தன்.

ஆனால்,ட்விட்டர் நிறுவனம் மட்டும்  குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் தகவல் தொடர்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில்,ட்விட்டர் நிறுவனம் புதிய சட்டவிதிகளை செயல்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாகஇருக்கு என்று  ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.