அடுத்த வருஷம் சேப்பாகம் வறோம்னு சொல்லு : தோனி ஸ்பீச் வைரல்
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் 11 வருடங்கள் தோனியே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடும் ஒப்படைப்பதாக கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் தோனி.
தோனி கடைசியாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார். அதன் பிறகு ஓய்வு பெற்று விடுவார் என பேச்சுக்கள் நிலவி வந்ததே இதற்கு முழு முக்கிய காரணம்.
செனனை வருகிறோம்
இந்த வதந்திகளை தவிடுபொடியாக்கும் விதமாக, நான் எனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தான் விளையாடுவேன் எனஇன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, மீண்டும் ஐபிஎல் தொடர் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றியும் பேசியுள்ளார்.
ஆதரவு கொடுங்கள்
அதில் அவர் ,12 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு வெற்றிகளை பெற்று மிகச் சிறப்பான அணியாக விளையாடி வருகிறது. கடந்த வருடம் சென்னையில் போட்டியில் நடக்கப்படவில்லை என்பது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது.
We will come back to Chepauk - MS Dhoni ??#MSDhoni #WhistlePodu #CSK
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) October 9, 2022
? Lu Fee pic.twitter.com/9bZNqQEcFu
அடுத்த வருடம் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்புகிறோம். தொடர்ந்து இதே போல் உங்கள் ஆதரவை கொடுங்கள். தோல்வியின் போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது என கூறியுள்ளார்.