பாஸ்.. இந்திய அணியோட நம்பிக்கை இன்னும் குறையவில்லை : முகமது ஷமி நம்பிக்கை

3rd Test mohammedshami indvs eng
By Irumporai Aug 27, 2021 05:29 AM GMT
Report

இந்திய அணியின் நம்பிக்கை குறைந்துவிடவில்லை 3-வது டெஸ்டில் நாங்கள் மீண்டு வருவோம் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

லீட்ஸில் நடந்து வரும் 3-வதுடெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி நேற்றைய 2வது ஆட்டத்தில் நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் சேர்த்து 345 ரன்களில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி தற்போது வலுவான நிலையில் இருப்பதால் இங்கிலாந்து அணிக்குதான் வெற்றி என கூறப்படுகிறது,இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பது அனைவரது கேள்வியாக இருந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மனரீதியாக எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. இதற்குமுன் பல டெஸ்ட்போட்டிகளை 3 நாட்களில் முடித்திருக்கிறோம், ஏன் 2 நாட்களில்கூட முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.

இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன, 1-0 என்ற கணக்கில் இந்திய அணிதான் முன்னிலையில் இருக்கிறது. எங்கள்திறமையை நாங்கள் நம்புகிறோம், மீண்டு வருவோம் அதற்கான நேரஅவகாசமும் இருக்கிறது. எதிரணி தரப்பில் பெரிய பாட்னர்ஷிப் அமைக்கப்படும்போது,

அதைப் பார்த்து நாம் சோர்ந்துவிடக்கூடாது, தலைகுனிந்துவிடக்கூடாது. அந்த பாட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இந்திய அணியின் மனோபலம், நம்பிக்கை குறைந்துவிடவில்லை. 3-வது டெஸ்டில் நாங்கள் மீண்டு வருவதற்கு தேவையான கால அவகாசம் இருக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.