’’குளிரா இனிமே உன்னை எதுவும் செய்யாது ‘’ - குட்டியானைகளுக்கு போர்வை போர்த்தி பராமரிக்கும் தேசிய பூங்கா

By Irumporai Dec 22, 2021 08:49 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் தற்போது அதீத குளிர் காலம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 29 வரையிலான 40 நாட்கள் ஜம்மு காஷ்மீரில் கடுங்குளிர் நிலவும். இந்த காலகட்டத்தில் பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ் செல்லும் தட்பவெப்ப நிலையால் நீர்நிலைகள் உறைவது வழக்கம்.

இதனால் பிரபலமான சுற்றுலாத்தலமான தால் ஏரி உள்ளிட்ட ஏரிகளும் முற்றிலும் உறைந்து காணப்படும். மேலும் அசாமில் குளிருக்கு இதமாக குட்டி யானைகளுக்கு போர்வை போர்த்தப்படுகிறது. வடமாநிலங்களில் நிலவும் கடும் குளி்ரால் வன விலங்குகளும் அவதியடைந்து வருகின்றன.

இந்நிலையில் அஸ்ஸாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் குளிரால் தவிக்கும் யானைக்குட்டிகளுக்கு போர்வை போர்த்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மாலை மங்கியதும் ரூம் ஹீட்டர் வசதியுடன் கதகதப்பாக இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குளிரை சமாளிக்கும் வகையில் விலங்குகளுக்கு சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக பூங்காவின் மேலாளர் தெரிவித்துள்ளார். இதேபோல டெல்லி, பீகார், குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காங்களிலும் விலங்குகளுக்கு ஹீட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.