2021 ஆம் ஆண்டு உலகம் முழுக்க 14 கோடி குழந்தைகள் பிறக்கும்,யுனிசெஃப் தகவல்- இந்தியாவில் எவ்வுளவு தெரியுமா?

baby-world-child
By Jon Jan 02, 2021 08:00 AM GMT
Report

இந்த 2021 புத்தாண்டு தினத்தில் ,உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறக்கும் என யுனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது .

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 60,000 குழந்தைகள் பிறக்கும் என தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில்,புத்தாண்டின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக முதல் 10 நாடுகளில் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக குழந்தை பிறக்கும் முதல் 10 நாடுகளின் விவரமும், குழந்தைகளின் எண்ணிக்கையும்

இந்தியா -59,995 சீனா -35,615 நைஜீரியா- 21,439 பாகிஸ்தான்-14,161 இந்தோனேசியா -12,336 எத்தியோப்பியா -12,006 அமெரிக்கா -10,312 எகிப்து -9,455 பங்களாதேஷ் -9,236 காங்கோ குடியரசு- 8,640 என்று யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.