போதை பொருளுக்காக பெற்ற குழந்தையை கூவி கூவி விற்ற கொடூர தந்தை!!
அசாமில் போதை பொருள் வாங்குவதற்காக தான் பெற்ற குழந்தையை கூவி கூவி 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அசாமின் மோரிகன் மாவட்டத்தில் அமினுல் இஸ்லாம் - பேகம் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒருகுழந்தை உள்ளது.
போதை பழக்கத்திற்கு அடிமையான இஸ்லாம் மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேகம் அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் இஸ்லாம் போதை பொருள் வாங்க காசு இல்லாமல் தவித்து வந்தார். இதனால் தன் குழந்தையை விற்றாவது போதை பொருள் வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தைக்கு ஆதார் வாங்க வேண்டும் என்று பேகமின் தாயார் வீட்டிற்கு சென்று குழந்தையை வாங்கி வந்துள்ளார். அதன் பிறகு ரோட்டில் கூவி கூவி ஒரு பெண்ணிடம் 40 ஆயிரம் ரூபாய்க்கு பெற்ற குழந்தையை விற்றுள்ளார்.
இதனை அறிந்த பேகம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு பேகத்திடம் ஒப்படைத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.