தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் அம்மாவை தேடி வந்த குழந்தை- நெகிழ்ச்சி வீடியோ வைரல்
அமெரிக்க நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஏபிசி7 செய்தி நிறுவனம் உள்ளது. இந்த செய்தி நிறுவனத்தில் வானிலை தொகுப்பாளராக லெஸ்லி லோபஸ் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது கொரோனா பரவல் காரணமாக காரணமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் லெஸ்ஸி, வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். தினசரி இரவு வேளையில் மாநில வானிலை அறிக்கையை தொகுப்பித்து வழங்குவது வழக்கம். நேற்று இரவு நேரடி ஒளிபரப்பின் போது, வானிலை முன்னறிவிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, வானிலை அறிக்கை செய்தியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, அவரது பத்து மாத குழந்தை தவழ்ந்து வந்து தாயை தேடி வந்து காலினை பிடித்து எழுந்து நிற்க முயற்சி செய்தது.
Baby on the move! There is no stopping adorable Nolan now that he can walk during Mommy’s (@abc7leslielopez) forecast. #Love #goodmorning #ThursdayThoughts #Babies #TheBest @ABC7 pic.twitter.com/jvUcaSMyGi
— Brandi Hitt (@ABC7Brandi) January 28, 2021
இச்சூழ்நிலையை சமாளித்தபடியே, லெஸ்ஸி தனது மகனை இடுப்பில் தூக்கி வைத்தபடியே வானிலை அறிக்கையை நிறைவு செய்தார். மேலும், தனது மகன் தன்னை தேடி வந்துவிட்டதாகவும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகப்பட்டு வருகிறது.