’ஆண்ட்டி..ஆண்ட்டி நான் நல்லா பேன் பார்ப்பேன், நம்புங்க’ - பெண்ணின் தோள் மீது அமர்ந்து பேன் பார்க்கும் குரங்கின் வீடியோ வைரல்

nilgirimonkey monkeyvideos cutebabymonkey
By Swetha Subash Mar 31, 2022 01:05 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குரங்கு குட்டி ஒன்று பெண்ணின் தோளில் ஏறி அமர்ந்து ' பேன் ' பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

வீட்டிற்குள் புகுந்து குரங்குகள் உணவுப் பொருட்களை திருடி தின்று நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறு உணவு தேடி வாடிக்கையாக ஊருக்குள் புகுந்துவிடும் குரங்குகளில் சில குரங்குகள், பொதுமக்களுடன் இயல்பாக பழகுகின்றன.

’ஆண்ட்டி..ஆண்ட்டி நான் நல்லா பேன் பார்ப்பேன், நம்புங்க’ - பெண்ணின் தோள் மீது அமர்ந்து பேன் பார்க்கும் குரங்கின் வீடியோ வைரல் | Baby Monkey In Nilgiri Sits On Woman Shoulder

அந்த வகையில் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமப் பகுதிக்குள் புகுந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குட்டிக் குரங்கு அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தோள் மீது ஏறி அமர்ந்து அவர் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி இளைஞர்கள் இதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.