குழந்தையை கடத்த இப்படியெல்லாமா நாடகம் போடுவிங்க? - சிக்கிய தம்பதி!
டெல்லியில் அங்கன்வாடி ஊழியர் என்று பொய் சொல்லி குழந்தையை கடத்திய தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் சந்திரவாதி - வீரேந்தர் தம்பதியினர் தொடர்ந்து குழந்தை கடத்தலை நூதன முறையில் செய்து வருகின்றனர்.
இதுவரை பல குழந்தைகளை கடத்தி குழந்தையில்லா தம்பதியினருக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதன் படி அவர்கள் கடந்த வாரம் மேற்கு டெல்லியின் மோதி நகர் பகுதியில் வசித்த ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதை கேள்விப்பட்டு அந்த குழந்தைகளை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு விரைந்த மோசடி தம்பதியினர் தாங்கள் அங்கன்வாடி ஊழியர்கள் என்றும், இலவச மருந்து கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும், கூறி குழந்தையை போட்டோ எடுப்பதாக தூக்கி சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில் குழந்தை கடத்தப்பட்டதை உணர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,
சம்பவ இடத்திற்கு விரைந்து மோசடி தம்பதியினரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.