குப்பைத் தொட்டியில் குழந்தை - வீசிச் சென்ற தாயே பதறி அடித்து ஓடிவந்த பரிதாபம்!
கணவர் பிரிந்து சென்றதால் வளர்க்க முடியாததால் குழந்தையை, அதன் தாய் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றார். அதைதொடர்ந்து அவர், குழந்தையை தேடிவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மத்தேபுரா பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை தொட்டியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது.
இந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அதனை மீட்டு கொள்ளேகால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
குப்பையில் குழந்தை
விசாரணையில் குழந்தையை, அதன் தாய் வீசிச் சென்றது தெரியவந்தது. ஆனால், குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. இதற்கிடையே குழந்தையை வீசிச் சென்ற தாய், மீண்டும் குப்பை தொட்டிக்கு வந்து குழந்தையை பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், குழந்தையை போலீசார் மீட்டுச் சென்றதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி
இதையடுத்து பெண், கொள்ளேகால் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம், நான்தான் குழந்தையின் தாய் என்று கூறினார். இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!