கள்ளக்காதலனுக்கு பிறந்த 2 குழந்தைகளையும் கொன்று குழித்தோண்டி புதைத்த கொடூரத் தாய் - அதிர்ச்சி சம்பவம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், நொச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடை ய மனைவி முத்துமாரி. இசக்கிமுத்து சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், முத்துமாரியும், வடநத்தம் பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் இரகசிய உறவு வைத்துக் கொண்டு வந்தனர். இந்த ரகசிய உறவில் முத்துமாரிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த பெண் குழந்தையை அங்குள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்று விட்டார். இதை அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக உதவியாளர் கருப்பசாமி போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அந்த குழந்தை உடலை மீட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முத்துமாரியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், முத்துமாரியையும், கள்ளக்காதலன் சசிகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முத்துமாரிக்கு கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த ஆண் குழந்தையை வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சசிகுமாரும், கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் இருந்த முத்துமாரியும் நொச்சிகுளத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. குழியில் இருந்த குழந்தையின் எலும்பு துண்டுகளை வெளியே எடுத்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனுடன் ரகசிய உறவு வைத்து பிறந்த 2 குழந்தைகளை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.