அந்த மனசுதான் தங்கம் : யானைக்கு முதலுதவி செய்த கால்நடை மருத்துவர்கள் வைரலாகும் வீடியோ
தாய் யானைக்கு முதலுதவிசெய்து குட்டி யானையினையும் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழியில் விழுந்த குட்டி யானை
காட்டு விலங்கான யானைக்கும் மனிதர்களுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. அந்த வகையில் தாய்லாந்தில் தாய் யானையினையும் குட்டியானையினையும் வனத்துறை அதிகாரிகள் மீட்ட வீடியோதான் தற்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

மயங்கி விழுந்த தாய் யானை
தாய்லாந்து நாட்டில் உள்ள மான்ஹோல் பகுதியில் ஒரு வடிகால் குழியில் குட்டியானை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த தாய் யானை தனது குட்டியினை மீட்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளது.
கரம் கொடுத்த மனிதர்கள்
அப்போது அருகில் இருந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மீட்பு பணிகளை தொடங்கினர், குட்டி யானையினை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் மயங்கி இருந்த தாய் யானைக்கு மூச்சினை வரவைக்க அதன் மீது ஏறி குத்தித்து முதலுதவி செய்துள்ளனர்.
இயல்புக்கு நிலைக்கு வந்த தாய் யானை தனது குட்டியினை வாரி அணைத்தபடி தனது புகலிடமான காட்டுக்கு செல்கின்றது யானையினை காப்பாற்றிய மகிழ்ச்சியில் ஒரு பெண் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.