யூடியூப் பார்த்து பிரசவம் செய்த பெற்றோர் - குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.
யூடியூப் பார்த்து பிரசவம்
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரையில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லாமல், ராஜசேகரும் அவரின் தாயும் சேர்ந்து யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்துள்ளனர்.
குழந்தை உயிரிழப்பு
இதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை இறந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அபிராமிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை இறந்ததால் அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதற்காக 2வது கர்ப்பத்தை சுகாதாரத்துறையினரிடம் மறைத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.