குறைபிரசவ குழந்தையை பெற்றெடுத்து டாய்லெட்டில் பிளஷ் செய்த கொடூர தாய்
கேரளாவில், ஹாஸ்ப்பிட்டல் டாய்லெட்டுக்குள் தவறாக பிறந்த குழந்தையை கொடூரமாக கொலை செய்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவின் கொச்சியில் உள்ள வயநாடு பகுதியில் ஒரு 20 வயதான இளம் பெண் தன்னுடைய தாயாரோடு வசித்து வந்தார். அந்த பெண்ணை அங்குள்ள வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து பின் தொடர்ந்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண் அந்த வாலிபரை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபரிடம் அந்த பெண் தனியாக சிக்கி கொண்டார். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார். அதனால் அந்தப்பெண் எவ்வளவோ முயன்றும் அந்த கர்ப்பத்தை கலைக்க முடியாமல் அந்த குழந்தையை சுமந்தார். அதன் பிறகு அந்த பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்தது .
அதனால் அவர் தன்னுடைய தாயாருடன் அங்குள்ள ஒரு ஹாஸ்பிடலுக்கு கடந்த வாரம் பிரசவத்துக்கு சென்றார். அப்போது அவரை அங்கு காத்திருக்க சொன்னபோது ,அவருக்கு பிரசவ வலி எடுத்தது .அதனால் அவர் அந்த ஹாஸ்ப்பிட்டல் டாய்லெட்டுக்குள் சென்றார்.
அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது . அதன் பிறகு அந்த பெண் தனக்கு பிறந்த அந்த குழந்தையை டாய்லெட்டில் குதறி தண்ணீரை ஊற்றி பிளஷ் செய்தார்.
அதன் பிறகு அவர் ஸ்கேன் சென்டருக்கு சென்றார் .பிறகு அந்த டாய்லெட்டுக்குள் சென்ற ஒரு நபர் அங்கு இறந்த குழந்தையின் எச்சங்களை பார்த்து புகார் செய்தார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் குழந்தையை கொன்றது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.