2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மத்திய பிரதேசத்தில் 2 தலை, 3 கைகளுடன் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் பிறப்பில் அவ்வப்போது இரட்டை குழந்தைகள், உடல் உறுப்புகள் ஒட்டி பிறக்கும் குழந்தைகள், வித்தியாசமான நோயுடன் பிறக்கும் குழந்தைகள் என வினோத சம்பவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் ஜாவ்ரா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தை இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. இதில் மூன்றாவது கை இரண்டு தலைகளுக்கும் இடையே இருந்துள்ளது. ரத்லாம் குழந்தைகள் மருத்துவனையில் உள்ள சிறப்பு குழந்தைகள் பிரிவில் சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குழந்தைகள் வயிற்றில் இருந்தபோது சோதனை செய்ததில் இரட்டையர்கள் போன்றே தெரிந்ததாகவும், இப்படியான குழந்தைகளில் பலர் கருவிலோ அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் குழந்தை மட்டுமே இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் உள்ள நிலையில் தாய் ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.