முகத்தில் நிரந்தர சிரிப்புடன் பிறந்த அதிசய குழந்தை - கொஞ்சி கமெண்ட் அடித்துவரும் இணையவாசிகள்!

Australia
By Swetha Subash May 28, 2022 08:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 21 வயதான கிரிஸ்டினா வெர்ஷர் மற்றும் பிளேஸ் முஷா தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

அய்லா சம்மர் முஷா என்ற பெயரிடப்பட்ட அந்தக்குழந்தையின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பதாக பெற்றோர் நினைத்தனர். குழந்தையின் வாயின் இரு முனைப்பகுதியும் சரியாக இணையாமல் இருந்துள்ளது.

முகத்தில் நிரந்தர சிரிப்புடன் பிறந்த அதிசய குழந்தை - கொஞ்சி கமெண்ட் அடித்துவரும் இணையவாசிகள்! | Baby Born With Permanent Smile Rare Condition

குழந்தை வளர வளர இது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

மருத்துவ உலகில் இந்தப்பிரச்னைக்கு பைலேட்டிரல் மைக்ரோஸ்டோமியா என்று பெயரிடப்பட்டுள்ளது. வாய்ப்பகுதியின் இரு முனையும் சரியாக இணையாமல் இருப்பதால் குழந்தை எப்போழுதும் சிரித்தப்படியே உள்ளது போல் இருக்கிறது.

முகத்தில் நிரந்தர சிரிப்புடன் பிறந்த அதிசய குழந்தை - கொஞ்சி கமெண்ட் அடித்துவரும் இணையவாசிகள்! | Baby Born With Permanent Smile Rare Condition

தன் குழந்தையின் இந்த அரியவகை பிரச்சினைக்கு டிக் டாக் மூலம் ஏதேனும் சிகிச்சை முறைகள் அல்லது வேறு குறிப்புகள் கிடைக்கலாம் என கருதி டிக் டாக்கில் பெற்றோர்களான கிரிஸ்டினா மற்றும் பிளேஸ் தம்பதி பேபி அய்லாவின் நிலையை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் டிக் டாக் வீடியோ மூலம் தற்போது அய்லா உலகம் முழுவதும் செல்லக்குழந்தையாக மாறியுள்ளார். நிரந்தர புன்னகையுடன் இருக்கும் அய்லாவுக்கு பலரும் க்யூட் ரியாக்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.