4 கை, 4 கால்களுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை - உதவி செய்த நடிகர் சோனு சூட் - குவியும் வாழ்த்து

By Nandhini Jun 12, 2022 05:34 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தான நடிகர் சோனு சூட், இவர், இந்தி, தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்ததால் இவர் நிஜ ஹீரோவாக மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

4 கை, 4 கால் கொண்ட குழந்தை

இந்நிலையில், 4 கை, 4 கால் கொண்ட சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். பீகார் கிராமத்தை சேர்ந்த சாமுகி குமாரி என்ற சிறுமி, பிறவியிலிருந்தே 4 கால், 4 கைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த சிறுமி குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதை அறிந்த நடிகர் சோனு சூட் அச்சிறுமிக்கு உதவி செய்ய முன்வந்தார்.

4 கை, 4 கால்களுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை - உதவி செய்த நடிகர் சோனு சூட் - குவியும் வாழ்த்து | Baby Born With 4 Arms And 4 Legs Actor Sonu Sood

அறுவை சிகிச்சை

இதனையடுத்து, சூரத்தில் உள்ள மருத்துவமனையில் அச்சிறுமியை சோனு சூட் சேர்த்தார். கடந்த புதன்கிழமை சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த 2 கை, 2 கால்கள் நீக்கப்பட்டன. தற்போது, சிறுமி சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார்.

தற்போது, அச்சிறுமி வீடு திரும்பி இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்திருக்கிறார். அக்குழந்தையின் படிப்பு செலவிற்கும் உதவி செய்வதாக சோனு சூட் உறுதியளித்துள்ளார். இது குறித்த செய்திகளை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் செயலுக்கு பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவைலத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.