அரசியலில் இருந்து விலகுகிறேன் - பாஜக எம்.பி அதிரடி அறிவிப்பு

Central government BJP MP Babul Supriyo
By Petchi Avudaiappan Jul 31, 2021 04:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

 அரசியலிலிருந்து விலகுவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக மக்களவை எம்பியுமான பாபுல் சுப்ரியோ அறிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாபுல் சுப்ரியோ 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியின் எம்.பியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதவி வகித்து வந்த பாபுல் சுப்ரியோ சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றம் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விடைபெறுகிறேன்.நான் எந்த அரசியல் கட்சிக்கும் போகவில்லை. திரிணாமூல் , காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் யாரும் என்னை அழைக்கவில்லை, நான் எங்கும் போகவில்லை. சமூகப் பணிகளைச் செய்ய ஒருவர் அரசியலில் இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், நான் வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை, என்றும், எப்போதும் " என அவர் தெரிவித்துள்ளார்.