ஒரு விளம்பரத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கும் 11 வயது மகேஷ் பாபு மகள்!.. எவ்ளோ தெரியுமா?

Jiyath
in பிரபலங்கள்Report this article
நகை விளம்பரத்தில் நடித்ததற்கு கோடியில் சம்பளம் வாங்கிய மகேஷ் பாபுவின் மகள் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகேஷ்பாபு
தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் மகேஷ்பாபு. இவர் 32க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த குண்டூர் காரம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மகேஷ்பாபு நடிகை நம்ரதா சிரோத்கரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கவுதம் கிருஷ்ணா, சித்தாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
1 கோடி சம்பளம்
இவர்களது 11 வயதாகும் மகள் சித்தாரா அண்மையில் நகை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக சித்தாராவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வமான செய்தி ஏதும் வரவில்லை. இந்த விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது. தங்கள் மகளுக்கு இந்த இளம் வயதில் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அவரின் பெற்றோர்கள் மகேஷ் பாபுவும் நம்ரதா சிரோத்கரும்.
11 வயதில் 1 கோடி சம்பளம் வாங்கிய சித்தாராவை கண்டு பலரும் வியக்கின்றன. இந்த செய்தி இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.