பாபர் மசூதி இடிப்பு தினம் - தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

babri-masjid-demolition-day--police-protection
By Nandhini Dec 06, 2021 04:48 AM GMT
Report

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்பணியில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறார்கள். 

பாபர் மசூதி இடிப்பு தினம் - தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு | Babri Masjid Demolition Day Police Protection