எனக்கு துரோகம் பண்ணிட்டாரு..நிறைய ஏமாந்து விட்டேன்..!! பப்லு பிரித்விராஜ் வருத்தம்!!
அண்மையில் வெளியாகி ஹிந்தியில் மாபெரும் ஹிட்டடித்துள்ள ரன்பீர் கபூரின் அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பப்லு பிரித்விராஜ்.
பப்லு பிரித்விராஜ்
ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்த பின்னர் குணச்சித்திர நடிகராக மாறி, அதனை தொடர்ந்து சின்னத்திரைக்கு வந்தவர் பப்லு பிரித்விராஜ். தொடர்ந்து அவவ்போது படங்களில் நடித்து வரும், சமூகவலைத்தளங்களில் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமாகவே இருந்து வந்தார்.
தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய மீண்டும் பப்லு பிரித்விராஜ் குறித்து பரபரப்பாக செய்திகள் வெளிவர துவங்கின. 57 வயதான பப்லூவுக்கு 24 வயதேயான ஷீத்தல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் அதிகரித்தன.
பிரிவா..?
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை பகிர்ந்து வந்த ஷீத்தல் குறிப்பிட்ட சில படஙக்ளை தவிர்த்து மற்றபடங்களை முழுமையாக நீக்கியுள்ளார். அந்த மீதி புகைப்படங்களும் குழுவாக எடுத்து கொண்ட புகைப்படங்களே.
ஷீத்தலின் வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவர் நீங்கள் பிரிந்தார்களா என்று கமெண்ட் செய்ய, அந்த கமெண்டை , ஷீத்தல் கருத்தை லைக் செய்துள்ளதாக மற்றொருரவர் கமெண்ட் செய்துள்ளார். இதுவே வதந்தியை கிளப்பியுள்ளது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளிவரவில்லை.
என்னை ஏமாற்றிவிட்டார்
இது தொடர்பான பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், பிரித்விராஜ் இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தான் ஷீத்தலை பிரிந்து விட்டதாக எங்கேயாவது கூறினேனா..? என்ற கேள்வியை முன்வைத்த அவர், அல்லது ஷீத்தல் எங்கேயாவது அப்படி கூறினாரா..? என்று வினவி, நீங்களாக பிரிந்து விட்டோம் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, இனி மேலும் திருந்தவில்லை என்றால் தான் தான் முட்டாள் என்று அர்த்தம் என்ற பிரித்விராஜ்,தனக்கு இப்போது தான் எல்லாமே புரிகிறது என்று கூறினார்.
கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று விரக்தியுடன் தெரிவித்த அவர், அழகு, சினிமாவில் வாய்ப்பு, நல்ல உடலை கொடுத்த கடவுள் வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார் என்று வேதனையுடன் கூறினார்.