சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Dec 06, 2022 05:18 AM GMT
Report

அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

 அம்பேத்கர் நினைவு தினம்

சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் ட்வீட்

இந்த நிலையில் ட்விட்டர் பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்.

புரட்சியாளர்அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.