அந்தர் பல்டி அடித்த பாபா ராம்தேவ்..!
நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என யோகா குரு பாபா ராம்தேவ் பேசவே இல்லை என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு என அழைத்துக்கொள்ளும் பாபா ராம் தேவ் பதஞ்சலி எனும் ஆயுர்வேத நிறுவனத்தை நடத்தி வருகிறார். கொரோனவுக்கு கொரோனில் என ஒரு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிட்டவர் ராம்தேவ்.
ஆனால் ராம்தேவின் கொரோனில் மருந்து, நோய் எதிர்ப்பு சக்திக்குரியதுதான்; கொரோனாவுக்கான மருந்து அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் வெளிநாடுகளில் கொரோனில், கொரோனா எதிர்ப்பு மருந்துதான் என விற்பனை செய்து வருகிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுனம்.

அண்மையில் ஹரித்வாரில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கி இருப்பதாக அறிவித்தார் ராம்தேவ். அலோபதி, ஆயுர்வேதம் இரண்டும் கலந்த சிகிச்சை, கொரோனாவுக்கு தரப்படுகிறது எனவும் தம்பட்டம் அடித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு, ராம்தேவ் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
அத்துடன் ராம்தேவின் கருத்துக்கு விளக்கம் கேட்டு சட்டரீதியாக நோட்டீஸ்-ம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நவீன அறிவியல் மருத்துவத்தை ராம்தேவ் விமர்சிக்கவே இல்லை என்றும், அவர் தெரிவித்த கருத்துகள் அனைத்துமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.