பாபா ராம்தேவ் கருத்து சொல்ல தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

covid19 highcourt babaramdev
By Irumporai Jun 03, 2021 12:21 PM GMT
Report

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்குத் தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டதாக பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.

அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தால் தான் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். என  பாபா ராம்தேவ் விமா்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் பாபா ராம்தேவிற்கு எதிராக டெல்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த  உயர்நீதிமன்றம், அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துகள் அடிப்படை கருத்து சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.