‘’கும்பமேளாவை குறை சொல்பவர்களை நாடு மன்னிக்காது’’ -பாபா ராம்தேவ் கோபம்

kumbhmela babaramdev
By Irumporai May 19, 2021 11:10 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை அதாவது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் பல சிரமபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கும்பமேளா மற்றும் தேர்தல் பிரச்சாரம் போன்றவைதான் கொரோனா இரண்டாம் அலை பரவ அதிகமான காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கும்பமேளா குறித்து விமரசனம் செய்பவர்களை கண்டித்துள்ள பாபா ராம்தேவ்.

சமூக வலைதளங்கள் மூலமாக கும்பமேளாவை குறை சொல்கின்றவர்கள் பெரும் தவறிழைக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் செய்பவர்களை இந்த நாடு மன்னிக்காது. இதுபோன்ற நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.