சென்னையில் பயங்கர குண்டு வெடிப்பு - உடல்கள் சிதறி எதிர் வீட்டுமாடியில் விழுந்த பயங்கரம்!! ஆறாத வடு!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.
அந்த வகையில் இதன் காரணமாக சென்னையிலும் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
சென்னை சேத்துப்பட்டு எம்.பி நாயுடு தெருவிலிருந்த ஆர். எஸ். எஸ். அலுவலகத்திலும் குண்டு வைக்கப்பட்டது. கடந்த 1993-ல் நடந்த இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு மிகவும் பயங்கரமானது. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்தவர்களின் உடல்கள் சிதறி எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளன.
அந்த அளவிற்கு பயங்கரமான வெடிகுண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில், 18 பேர் கைது செய்யப்பட்டனர். 2007ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தடா கோர்ட் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது.
அதில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது. எஸ்.ஏ .பாஷா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் அந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து தற்போது 28 ஆண்டுகள் ஆகின்றன.
இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பேசுகையில், 28 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் சென்னை ஆர். எஸ். எஸ். இயக்க அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு 11 இயக்க சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று எனவும், இன்றும் தொடரும் பயங்கரவாதத்தை ஒழித்து கட்ட உறுதி கொள்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது குறித்து, ஹெச் ராஜாவும் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 1993ஆகஸ்ட் 8ம் தேதி முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆர். எஸ். எஸ். அமைப்பின் சேத்துப்பட்டு
அலுவலகத்தில் குண்டு வைத்து வெடிக்கச் செய்ததில் உயிர்நீத்த தியாகிகள் அனைவருக்கும் இதய பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.