பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 52 பந்தில் சதமடித்த பாபர் அசாம்: 255 ரன் குவித்த அணி

Pakistan national cricket team Babar Azam
By Sivaraj Apr 20, 2026 07:41 AM GMT
Report

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான PSL போட்டியில் பெஷாவர் ஜால்மி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பாபர் அஸாம் அதிரடி சதம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் நேற்றையப் போட்டியில், பெஷாவர் ஜால்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. 

முதலில் களமிறங்கிய மொஹம்மது ஹாரிஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோஸப் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ், பாபர் அஸாமுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.

இருவரின் ருத்ரதாண்டவ ஆட்டம் மூலம் பெஷாவர் அணி 255 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.  

Babar Azam

கடைசி வரை களத்தில் இருந்த பாபர் அஸாம் 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்தார்.  

Babar Azam

அபார வெற்றி

பின்னர் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பெவோன் ஜேக்கப்ஸ் 34 ரன்கள் எடுத்தார்.

மொஹம்மது பசித், அலி ரஸா தலா 3 விக்கெட்டுகளும், ஆரோன் ஹார்டி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பெஷாவர் ஜால்மி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Babar Azam 

Babar Azam 

Babar Azam