சச்சின், கோலி சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் - வாய்ப்பே இல்லை என கதறும் ரசிகர்கள்
சச்சினின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மொத்தமாக 390 ரன்கள் விளாசினார். இதில் அதிகபட்சமாக 196 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாபர் அசாம் அதிரடியால் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் அவர் 2 போட்டிகளில் சதமடித்தார். குறிப்பாக மூன்றாவது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 16 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் படைத்தார்.
மேலும் விராட் கோலி 110 இன்னிங்ஸிலும், ஹசிம் ஆம்லா 94 ரன்களிலும் படைத்த இச்சாதனையை பாபர் அசாம் 84 இன்னிங்ஸிலேயே படைத்து விட்டார். இதே போன்று சேஸிங்கில் கேப்டனாக பாபர் அசாம் அடித்த 4வது சதமாகும். இதன்மூலம் அவர் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதனிடையே ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 16வது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பாபர் அசாம் பின்னுக்கு தள்ளியுள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.