விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

Babar Azam
By Karthikraja Apr 10, 2026 12:27 PM GMT
Report

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

பெர்ஷாவர் சல்மி வெற்றி

PSL தொடரின் நேற்றைய போட்டியில், பெர்ஷாவர் சல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதியது. 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம் | Babar Azam Break Kohli Record Fastest 12000 Runs

டாஸ் வென்ற பெர்ஷாவர் சல்மி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்தது. 

CSK-யில் மீண்டும் சொதப்பிய சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் பிளெம்மிங் ஆதரவு குரல்

CSK-யில் மீண்டும் சொதப்பிய சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் பிளெம்மிங் ஆதரவு குரல்

47 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராச்சி கிங்ஸ் அணி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம் | Babar Azam Break Kohli Record Fastest 12000 Runs

இதன் மூலம், 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்ஷாவர் சல்மி அணி, PSL தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது.

பாபர் அசாம் சாதனை

இதில், 87 ரன்கள் அடித்த பாபர் அசாம், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம் | Babar Azam Break Kohli Record Fastest 12000 Runs

நேற்றைய போட்டியில், 87 ரன்கள் எடுத்ததன் மூலம், பாபர் அசாம் T20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்தார்.

338 இன்னிங்ஸில், 11 சதங்கள் மற்றும் 99 அரை சதங்களுடன் பாபர் அசாம் 12,000 ரன்களை கடந்து, அதிவேகமாக 12,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி, 360 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்துள்ளார்.