கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை - கோலியை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர்
டி20 போட்டிகளில் வேகமாக 11000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20
தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
2 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
11000 ரன்கள்
நேற்று நடந்த 2வது T20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 20 பந்துகள் ஆடி 31 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார்.
டி20 போட்டிகளில் அதி வேகமாக 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். பாபர் அசாம் 299 டி20 இன்னிங்ஸ்களில் 11000 ரன்களை எட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 314 இன்னிங்ஸ் ஆடி இந்த 11000 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்ததாக டேவிட் வார்னர் 330 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 337 இன்னிங்ஸ்களிலும் 11,000 ரன்களை கடந்தனர்.
ரோஹித் சாதனை
மேலும் 31 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 14,000 ரன்களை கடந்துள்ளார். வேகமாக 14,000 ரன்கள் கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் இன்னும் 9 ரன்கள் குவித்திருந்தால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சாதனையை படைத்திருக்கலாம். 4231 ரன்களுடன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது 2வது இடத்தில் உள்ள பாபர் அசாமிற்கு இந்த சாதனையை அடைய இன்னும் 9 ரன்களே தேவைப்படுகிறது.