11 வீரர்கள் அணியில் இருக்காங்க; என்னை மட்டும் ஏன் குறை சொல்றீங்க - டென்ஷனான கேப்டன்!

Pakistan national cricket team T20 World Cup 2024
By Sumathi Jun 17, 2024 02:30 PM GMT
Report

பாபர் அசாமின் கேப்டன்சியை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாபர் அசாம்

3 டி20 உலகக்கோப்பை, 2 ஆசியக் கோப்பை, உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. இந்த அணிக்கு கேப்டனாக பாபர் அசாம் செயல்பட்டு வருகிறார்.

pakistan cricket team

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாபர் அசாம், நான் நாடு திரும்பிய பின் நிச்சயம் இங்கு நடந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்போம். ஒருவேளை நான் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டுமென்றால், நான் வெளிப்படையாகவே அறிவிப்பேன்.

விராட் கோலி - பாபர் அசாம்.. செருப்புக்கு கூட சமமாக மாட்டார் - விளாசிய வீரர்!

விராட் கோலி - பாபர் அசாம்.. செருப்புக்கு கூட சமமாக மாட்டார் - விளாசிய வீரர்!


 பாகிஸ்தான் அணி 

நான் எதையும் மறைக்கப் போவதில்லை. இப்போது வரை கேப்டன்சியில் விலகுவது குறித்து சிந்திக்கவில்லை. நான் ஏற்கனவே சொல்லியதை போல், ஒரு வீரரால் நாங்கள் எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை. நான் வெல்லும் போதும், தோற்கும் போதும் அணியாகவே விளையாடுகிறோம்.

babar assam

ஆனால் தோல்வியின் போது கேப்டனை தான் கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. 11 வீரர்கள் விளையாடுகிறோம் என்றால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோல் உள்ளது. அதற்காக தான் அவர்கள் அனைவரும் உலகக்கோப்பையில் விளையாட வந்துள்ளனர்.

ஒரு அணியாக இணைந்து விளையாட முடியவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.