இன்னும் உச்சமடையும் தங்கம் விலை - பீதியை கிளப்பும் பாபா வாங்கா
தங்கத்தின் விலை மேலும் புதிய உச்சத்தை அடையும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
பாபா வங்கா
பல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்த ஒரு தீர்க்கதரிசிதான் பாபா வாங்கா. சிறு வயதிலேயே பார்வையை இழந்த இவர், தனது உள்ளுணர்வின் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ளவற்றை முன்னரே கணித்து கூறியதன் மூலம் கவனம் பெற்றார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது போன்றவற்றை இவர் முன்னரே கணித்து கூறியிருந்ததாக நம்பப்படுகிறது.
தங்கம் விலை
அதன்படி இந்தாண்டு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இது பாரம்பரிய வங்கி முறையை பாதிக்கலாம்.
இந்த நெருக்கடியின் காரணமாக வங்கி நெருக்கடி, நாணயத்தின் மதிப்பு குறைதல் மற்றும் சந்தையில் பணப்புழக்கம் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.
இதனால் தங்கம் மற்றும் வெள்ளியில் பெரிய அளவில் ஏற்றம் காணப்படும் என கணித்துள்ளார். எனவே தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.