வானில், பூமியில் ஒரே நேரத்தில் வெடிக்கும்? ஆகஸ்ட் மாத பேரழிவு - பாபா வங்கா கணிப்பு!
ஆகஸ்ட் மாத பேரழிவு குறித்த பாபா வங்கா கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் மாத பேரழிவு
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
இந்நிலையில், ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும் என்று கணித்துள்ளார். இது நேட்டோ (NATO) அல்லது யூரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற கூட்டமைப்புகளில் உருவாகும் அரசியல் பதற்றங்களை குறிப்பதாக சந்தேகிக்கின்றனர்.
பாபா வங்கா கணிப்பு
மேலும், ஆகஸ்ட் மாதத்தில், வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் இரட்டை நெருப்புகள் எழும் என்று கணித்துள்ளாராம்.. காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்புகளாக இருக்கலாம் என்றும், .. சிறுகோள் அல்லது விண்கல் பூமியை தாக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஒருமுறை திறக்கப்பட்டதை மீண்டும் மூட முடியாது எனக் கணிக்கப்பட்டிருப்பது, உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது செயற்கை நுண்ணறிவு பற்றியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த வருடம், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிற அப்படையிலான இனவெறி ஆகியவை முடிவுக்கு வரும் என்ற கணிப்பு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.