முன்னாள் அமைச்சர் சுட்டு கொலை.. இறுதிசடங்குக்கு செல்லாத ஷாருக் கான் - ஏன் தெரியுமா?
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
சுட்டு கொலை
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தார். இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே
ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார். இவரது இறுதிச் சடங்கில் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா செட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிசடங்கு
ஆனால் சித்திக்கின் நெருங்கிய நண்பரான ஷாருக்கான் இறுதிச் சடங்கில் கொள்ளாதது பேசுப்பொருளகாக மாறியது. இந்த நிலையில்,ஒரு சில அரசியல் காரணங்களால்தான் ஷாருக்கான் சித்திக்கின்
இறுதிச் சடங்கில் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாபா சித்திக்கின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
கடந்த காலங்களில் இந்த கும்பல் சல்மான் கான், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.