பெரியாரை நீக்கிய பாபா .. பதுங்கிய ரஜினி ? மாற்றப்பட்ட அரசியல் Climax.. காரணம் என்ன ?
ரஜினிகாந்த்தின் நடிப்பில் பாபா திரைப்படம் ரீ-ரிலிஸ் ஆகியுள்ளது ,இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடினாலும் பாபா படத்தில் இடம்பெற்ற சில அரசியல் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது, திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியும் அரசியலும்
1996 பிறகு ரஜினிகாந்த் தனது படங்களில் அரசியல் வசனங்களை முன்வைத்தார் 1992-ம் ஆண்டு போயஸ் கார்டனில், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
அதன் பின்னார் வெளியான அண்ணாமலை' படத்தில் ‘’எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் ‘’என்று சினிமாவில் தன் முதல் அரசியல் நெடி வீசும் வசனத்தைப் பதிவு செய்தார் .
ரஜினிஅப்போது வந்த செய்திகளுக்கு ரஜினி எந்தக் கருத்தும் கூறவில்லையென்றாலும், இந்த வசனம் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.
அரசியல் வருகை
அதன் பிறகு 2002 ல் வெளியான பாபா படத்தில் பல காட்சிகளில் அரசியல் வசனங்கள் இருந்தது , இது அப்போது ரஜினிக்கு கடும் அழுத்ததை கொடுத்தது, அதன் பிறகு ரஜினி அரசியல் குறித்து பேசவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த மேடையில், தாமரையின் மீது பாபா சின்னம் இருப்பது போன்ற படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
அதனால் இம்முறை கண்டிப்பாகத் தலைவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பினார்கள். மீண்டும் அதே ஆண்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த ரஜினிகாந்த் இது காலத்தின் கட்டாயம்... வரப்போற சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்'' என்று அவர் சொன்னவுடன் அரங்கம் அதிர்ந்தது. 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ``கட்சி ஆரம்பிப்பது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
ஆனால் டிசம்பர் 29, 2020 அன்று வெளியிட்ட அறிக்கையில் பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.
அரசியல் வேண்டாம்
இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும்'' என்று கூறியிருந்தார்.ஆக இதன் மூலம் நேரடி அரசியலுக்கு ரஜினி வரவில்லை என்பது உறுதியானது .
இந்த நிலையில்தான் ,ரஜினியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், 20 வருடங்களுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் ரிலீஸாகியுள்ளது.
பாபா வசனங்கள் நீக்கம்
மீண்டும் பாபா படம் ரிலீஸாகியுள்ளது, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் , பாபா படம் வந்த போது அதில் இருந்த பாடல்வரிகள் மற்றும் வசனங்களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை குறிக்கும் வகையில் இருக்கும், குறிப்பாக ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் என்ற பாடல் வரியில் :
கடவுளை மறுத்து இவன் நாள் தோறும் கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்த தென்ன ஆதிக்கம்
திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி இந்த பாடல் வரிகள் தற்போது ரீ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.
கிளைமேக்ஸ் மாற்றம்
அதே போல் படத்தின் கிளைமக்ஸ் காட்சியில் பாபா உள்ள ரஜினி மக்களுக்காக துறவறம் போகாமல் கத்தியினை பிடித்து அரசியலுக்கு வருவது போல் இருக்கும் ஆனால் அந்த காட்சி தற்போது மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு சில காட்சிகள் முன்னும் பின்னும் ரீ எடிட் செய்துள்ளதாகவும் தற்போது உள்ள படங்களுக்கு போல கலரிங் செய்துள்ளதாகவும், பலர் பல விதமான நல்ல விமர்சனங்களை கொடுத்தனர்.
மேலும் சிலர் பாபா படத்தில் 7 மந்திரம் இருக்கும் இதில் 5 தான் உள்ளது. சில காட்சிகள் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கூறுகின்றனர் , ரஜினி ரசிகர்கள் . தான் அரசியலுக்கு வருவதை முத்து, படையப்பா ஆகிய படங்களில் வசனங்கள் மூலமாக கூறியிருப்பார் ஆனால் ரஜினி அரசியல் வருகை இல்லாமல் போனது சோகத்தை கொடுத்தாலும் தற்போது பாபா ரீ ரிலிஸ் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
ரஜினியைப் பொறுத்தவரை பாபா அவருக்கு நெருக்கமான படம். பிடித்த படங்கள் என எப்போதும் அவர் சொல்வது இரண்டைத்தான். ராகவேந்திரா மற்றும் பாபா. முள்ளும் மலரும், பாட்ஷா, அண்ணாமலை, எந்திரன் படங்கள் போன்றவை அவ்வப்போது சூழலைப் பொறுத்து பட்டியலில் இடம்பெறும்.
ஆனால் இவ்விரு படங்களும் எப்போதுமே அவருக்கு நெருக்கம். குறிப்பாக பாபா அவரது சிந்தனையிலிருந்து உதித்த கதை. பாபாவின் கதைப்படி, கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவன், பிறகு பாபாவின் அருளால் ஆன்மிகமடைந்து, அரசியலுக்குள் புகுகிறான் என்பதே கதை.
பாபா படம் வெளியானபோது இருந்த சூழல் இப்போது மாறிவிட்டது. தற்போது new Baba has born எனத் தெளிவாக சிந்தித்து படத்தை மறுவெளியீடு செய்துள்ளார் ரஜினிகாந்த்.
எல்லாவற்றையும் விட ரஜினி ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று கொடுத்திருப்பார் அதில் `நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும். அதனை சரியாக கையாண்டு விட்டார் சிவாஜி ராவ் ஆகிய ரஜினிகாந்த்..
பிறகு முக்கிய செய்தி என்னவென்றால் நேற்று பாபா மறு வெளியிடு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது அதன் வசூல் நேற்று ஒரு நாளில் மட்டும் 80 லட்சம் அதிசயம் அற்புதம் நிகழ்ந்துவிட்டது.