பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் - சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

By Thahir Nov 28, 2022 03:46 PM GMT
Report

‘ பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என பாபா ராமதேவ் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கோரினார்.

பாபா ராமதேவ் சர்ச்சை பேச்சு 

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் பதஞ்சலி யோகா மையம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை கடந்த 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) தானேயில் நடத்தப்பட்டது.

இதில் பதஞ்சலி தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் தலைமைவகித்தார். மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார்.

அப்போது பாபா ராமதேவ் யோகா பயிற்சிக்கு முன் பேசுகையில், ‘ பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என கூறினார்.

baba-ramdev-apologized-for-the-controversial-talk

பாபா ராமதேவ், பெண்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள். என கூறியது மஹாராஷ்டிராவில் மிகுந்த சர்ச்சையாகியது.

மன்னிப்பு கோரினார்

இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ்-க்கு பதில் அளித்து பாபா ராம்தேவ் பெண்கள் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.

அந்த மின்னஞ்சலில் தானேயில் நடந்த நிகழ்ச்சி பெண்களுக்காக நடத்தப்பட்டது. எனது ஒரு மணி நேர பேச்சை திரித்து தவறான நோக்கத்துடன் சில வினாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

தாய் பாலத்தின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் சாதாரணமாக ஆடை குறித்து தான் பேசினேன். அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

யாருக்கும் வேதனையை அளித்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.