படப்பிடிப்பு தளத்தில் பாபா பாஸ்கருடன் கொஞ்சி விளையாடிய குரங்கு - வைரலாகும் க்யூட் வீடியோ
பாபா பாஸ்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர் பாபா பாஸ்கர். இவர் சமீபத்தில் ‘குக் வித் கோமாளி சீசன் -2’ கலந்து கொண்டு மக்களின் இதயங்களை கவர்ந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
‘டங்காமாரி’, ‘வாட் எ கருவாடு’, ‘ரகிட ரகிட’ போன்ற தனுஷின் பவர்ஃபுல் குத்துக்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ முதல் சமீபத்தில் வெளிவந்த ‘ஜெகமே தந்திரம்’ வரை அவரது பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம் பெற்றிருக்கும் ஒரே டெக்னீஷியன் பெயர் என்றால் அது பாபா பாஸ்கர்தான்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் பாபா பாஸ்கரிடம் ஒரு குரங்கு ஒன்று கொஞ்சி விளையாடுகிறது. பாபா பாஸ்கரோ, அந்த குரங்கிடம் செல்லமாக.. இந்தா... இந்த மைக்கை பிடி... ஹலோ சொல்லு... என்று பேசுகிறார். பதிலுக்கு அந்த குரங்கோ, பாபா பாஸ்கரின் கன்னத்தில் முத்தமிட்டு, அவரின் தோளை தொட்டு தன்னுடைய அன்பை அவரிடம் பொழிகிறது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அந்த குரங்கின் செயலைக் கண்டு வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருமணத்தில் ஏ.ஆர்.ரகுமானின் கையை தொட்டு வணங்கிய விக்னேஷ் - வைரலாகும் புகைப்படம்