கிரிக்கெட் வீரருடன் காதல்...சத்தமில்லாமல் நடந்து முடிந்த தலைவாசல் விஜய் மகளின் திருமணம்
நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனாவிற்கும் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்துடன் திருமண நடைபெற்று முடிந்துள்ளது.
தலைவாசல் விஜய்
தமிழ் திரைப்படங்களில் நீண்ட காலமாக குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளவர் தலைவாசல் விஜய். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “தலைவாசல்” படத்தில் அறிமுகமான இவர் தமிழை கடந்து தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய மூத்த மகளான ஜெயவீனா சிறுவயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். மாநில அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார். கடந்த சில காலமாகவே, திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு தலைவாசல் விஜய் மகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
பாபா அபராஜித்துடன் திருமணம்
தொடர்ந்து தேசிய போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் ஜெயவீனாவிற்கு, தமிழக கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் நேற்று காலை சென்னை திருவான்மியூரில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான பாபா அபராஜித் தன்னுடைய 17 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். 2012ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இவர், தற்போது இந்தியாவின் A அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரின் திருமணமும் நடந்து முடிய தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : மாற்றியமைக்கப்பட்ட கற்றல் செயற்பாடு IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil