ஹார்முஸை தொடர்ந்து மற்றொரு நீரிணை மூடப்படும் அபாயம்! எச்சரிக்கை செய்தி

Iran-Israel War
By Fathima Mar 15, 2026 06:34 AM GMT
Report

ஈரான் மீதான போர் எதிரொலியாக ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முக்கிய நீரிணையான பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவுள்ளதாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில் பதிலடி கொடுத்து வருகிறது ஈரான்.

இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸை தொடர்ந்து மற்றொரு நீரிணை மூடப்படும் அபாயம்! எச்சரிக்கை செய்தி | Bab El Mandeb Will Closed Houthis Ready

இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய நீரிணையான பாப் எல் மண்டேப்பை மூடவிருப்பதாக ஈரான் ஆதரவு ஏமனின் ஹவுத்திகள் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையிலும் போரில் களமிறங்காமல் இருக்கும் ஹவுத்திகளின் இந்த நடவடிக்கை உலக வர்த்தகத்திற்கு நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.

ஹார்முஸை தொடர்ந்து மற்றொரு நீரிணை மூடப்படும் அபாயம்! எச்சரிக்கை செய்தி | Bab El Mandeb Will Closed Houthis Ready

குறித்த நீரிணை செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் கப்பல்களுக்கான போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறது.

ஹார்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் என இரு நீரிணைகள் மட்டுமே உலகளவில் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 30 சதவிகித பங்களிக்கிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸை தொடர்ந்து மற்றொரு நீரிணை மூடப்படும் அபாயம்! எச்சரிக்கை செய்தி | Bab El Mandeb Will Closed Houthis Ready