குடியரசு தின விழா - மக்களை திகைக்க வைத்த பிரமாண்டமான IAF Flypast - வைரல் வீடியோ...!

Viral Video Flight
By Nandhini Jan 26, 2023 08:28 AM GMT
Report

குடியரசு தின விழாவில், மக்களை திகைக்க வைத்தது பிரமாண்டமான IAF Flypast வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி குடியரசு தின விழா

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம்பெற்றன.

கடற்படையில் 144 இளம் மாலுமிகள் கலந்து கொண்டார்கள். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில், குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை தொடங்கியுள்ளன. டெல்லி குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

baaz-three-fighters-2023-republic-day-flypast

அந்தரத்தில் மாஸா பறந்த விமானங்கள்

74-வது குடியரசு தின விழாவில் 50 விமானங்கள் வானத்தில் பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்டன. இந்த விமானங்களின் கண்கவர் பயணம் மக்கள் திகைக்க வைத்தது.

தற்போது சமூகவலைத்தளங்களில் குடியரசு தினம் கொண்டாட்டத்தின் போது 50 விமானங்கள் மூலம் பிரமாண்டமான IAF Flypast வீடியோ வைரலாகி வருகிறது.