பாக்கியா தான் என் பொண்டாட்டி...உண்மையை சொன்ன கோபி..ராதிகாவின் முடிவு என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ஒருவழியாக கதையின் முடிச்சி அவிழ்ந்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இதன் நாயகன் கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறான். அந்த சமயத்தில் கோபியை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்வதோடு அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறார்.
இதற்காக கோபி செய்யும் தகிடு தத்தங்கள் என திரைக்கதை சுவாரஸ்யமாக செல்கிறது. இதனிடையே கோபி வீட்டில் நடக்கவிருக்கும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ராதிகாவிடம் கோபி பற்றி தெரிவிக்கின்றனர்.
இதனால் குழப்பமடையும் ராதிகா கோபியிடம் அவரது குடும்பம் பற்றி விசாரிக்க இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் குடித்து விட்டு வரும் கோபியிடம் ராதிகா மீண்டும் குடும்பத்தினரை காட்டும் படி சொல்ல ஒரு கட்டத்தில் பாக்கியாவும், தானும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை காட்டுகிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் ராதிகா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த வார கதை செல்லவிருக்கிறது. ஒருவழியாக கதையின் முடிச்சி அவிழ்ந்துள்ள நிலையில் விரைவில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறதா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.